பர்கூர் ஒன்றியத்தில் சூலாமலை ஏரி ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் புகார்

கிருஷ்ணகிரி: சூலாமலை ராமசாமி ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்தார். இதில், பர்கூர் ஒன்றியம் சூலாமலை ஊராட்சி கருக்கன்கொட்டாய் கிராம மக்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பர்கூர் தாலுகா சூலாமலை கிராமத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் ராமசாமி ஏரி உள்ளது.

இந்த ஏரியின் மூலம் சுமார் 60 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. மேலும், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் நிலம் வாங்கிய தனி நபர் ஒருவர், ஏரியில் கல் கம்பங்களை கொட்டி வைத்துள்ளார். மேலும், ஏரியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறார். இதனால் எங்களது குடிநீர் தேவையும், விவசாயமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, ஏரியை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: