1 கோடி குட்கா லாரியுடன் பறிமுதல்

* 7 பேர் அதிரடி கைது * போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே சத்தியவேடு பகுதியில் ₹ 1 கோடி மதிப்பு குட்கா லாரியுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுெதாடர்பாக,  7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதிக்கு   கர்நாடகாவில் இருந்து சரக்கு லாரியில் ₹1 கோடி மதிப்பில்  குட்கா கடத்தி வருவதாக சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, எஸ்.ஐ நாகார்ஜூன் மற்றும் தனிப்பிரிவு ஏட்டுகள் நடராஜன், தாமு ஆகியோர் நேற்று அதிகாலை சத்தியவேடு நுழைவாயிலில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த  வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை  மடக்கி சோதனை செய்தனர். அதில், ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதையறிந்த போலீசார் மூட்டைகளை பிரித்து தீவிர சோதனை நடத்தினர். அதில், கட்டுக்கட்டாக குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியவேடு போலீசார்  வழக்கு பதிவு செய்தனர்.மேலும், ஆந்திர மாநிலம் சத்தியவேடு   பகுதியை சேர்ந்த வேலு (35), சதீஷ் (35), செந்தில்குமார் (30), ஊத்துக்கோட்டை அருகே தாசுகுப்பத்தை சேர்ந்த ராஜி (35), மாரிமுத்து (34),  தமிழகத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வெங்கடேசன் (35, மாதர்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார்  (50) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: