தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை இருக்கக்கூடாது: நீதிமன்ற மாநாட்டில் மத்தியமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேச்சு

தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை எதுவும் இருக்கக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி இருக்கிறார். டெல்லியில் இன்று சர்வதேச நீதிமன்ற மாநாடு 2020, உலக மாற்றத்தில் நீதிமன்றம் என்ற தலைப்பில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்கள். மாநாட்டில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது; இப்படிப்பட்ட பிரிவினர் நாட்டின் நீதி பரிபாலன துறையை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க க்கூடாது என அவர் வேண்டிக் கொண்டார்.

ஜனரஞ்சகம் சட்டத்தின் தீர்க்கப்பட்ட கொள்கைகளை மீறக்கூடாது. வெகுஜன விருப்பம், நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் கொள்கைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். எப்படி ஆட்சி செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருப்பதைப் போல, நீதி வழங்குவது நீதிபதிகளின் கையில் தான் இருக்க வேண்டும், அதில் பிறர் தலையீடு கூடாது என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

Related Stories: