அச்சுறுத்தும் கொரோனா - சீனாவில் கொரோனா பலி 2,239 ஆனது

பிஜீங்: சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை 2,239 பேராக அதிகரித்தது. ஒரே இரவில் 120 இறப்புகள் பதிவாகியுள்ளன. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 75,500 ஆக உள்ளது. தேசிய சுகாதார ஆணையம் (என்எச்சி) நாடு முழுவதும் 889 புதிய நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சிறையில், குறைந்தது 27 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பதிவாகியுள்ளன. ஜைனிங்கில் உள்ள ரென்செங் சிறையில் கிட்டத்தட்ட 450 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

Related Stories: