திருச்சி ஆர்எம்எஸ் காலனி, அண்ணா நகரில் குப்பைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சுகாதார வளாகம்

திருச்சி: சுகாதார வளாகத்தில் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருச்சி பொன்மலை கோட்டம், ஆர்எம்எஸ் காலனி, அண்ணா நகர் பகுதியில் நீண்ட நாட்கள் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. மேலும், சாக்கடை கழிவுநீரும் தேங்கி இருப்பதாலும் கடும் துர்நாற்றம் வீசி அருகே உள்ள குழந்தைகள் மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவு அபாயம் ஏற்பட்டு வருகிறது. சுகாதார வளாகத்திற்கு எதிரே மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதால். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, கொசுகள் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 69 பகுதியில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் தற்போது சிதைந்து கிடப்பதால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. சுகாதார வளாகத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உறுதித்தன்மை இழந்து காணப்படுகிறது. இதனால் அச்சத்துடன் குழந்தைகள் வந்து செல்கின்றனர். மேலும் மின் வசதியின்றியும், சுகாதார வளாக கதவுகள் உடைந்தும் காணப்படுகிறது.

குழந்தைகள் பாதிப்பு

மேலும், இதன் அருகே குழந்தைகள் மையம் ஒன்று இயங்குகிறது. இம்மையம் பழமையான கட்டிடத்தில், ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையில் இயங்கி வருகிறது. இம்மையத்திற்கும் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், இம்மையத்தை சுற்றி புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்து இரவு நேரங்களில் பழமையான குழந்தைகள் மையத்தில் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் மையத்தின் எதிரே மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதால், துர்நாற்றம் வீசி குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகரர் தெரிவித்து வருகின்றனர். மேலும் சாக்கடையின் மேல் சிலாப் உடைந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாக்கடையில் இருந்து கொசு தொல்லை அதிகரித்து இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். எனவே ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து, குழந்தைகள் மையத்தில் நோய் பரவாமல் தடுக்க தடுக்க குப்பைகளை அகற்றியும், சாக்கடையை சீரமைத்தும் தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: