சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12.30 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடி செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. 2019 -20ல் ரூ.30 லட்சம் நிதியும் 2020-21ல் ரூ.11.91 கோடி நிதியும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நிதி ஒதுக்கீடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அசோக் டோங்க்ரே அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுகளின் மூலம் கண்டெடுக்கபட்ட தொல் பொருட்களை வருங்கால சந்ததியினர்கள், மாணவ, மாணவியர்கள், அறிஞர்கள் தொல்லியல்  வல்லுனர்கள் மற்றும் அயல் நாட்டு அறிஞர்கள் அறியும் வகையில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அகழ்வைப்பகம் அமைப்பது இன்றையமையாகிறது. இப்பணியானது பொதுப்பணித்துறையின் புராதன கட்டிடங்கள் பாதுகாப்பு பிரிவு மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அகழ்வைப்பகம் திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தில் 0.810 ஏர்ஸ் நிலத்தில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கொந்தகையில் அமைத்திட 2019-20ம் நிதியாண்டில் ரூ.30 லட்சமும், 2020-21ம் நிதியாண்டில் ரூ.11.91 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி ரூ.6.56 கோடி செலவில் காட்சி அறைகள், ஒப்பனை அறை, நிர்வாக கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைத்தல். ரூ.64 லட்சம் செலவில் பார்வையாளர் பயனீட்டு தொடர்பான விளக்க அட்டை, குடிநீர் மையங்கள், தொல் பொருட்களை அகழ்வைப்பகத்தில் காட்சிப்டுத்தல், ரூ.96 லட்சம் செலவில் பிளம்பிங், தீயணைப்பு வசதிகள், தணண்ணீர் தெளிப்பான்கள், ரூ.1.89 கோடி செலவில் மின்சாதனங்கள், மின் விளக்குகள், இஎல்வி குளிரூட்டிகள், தீ எச்சரிக்கை கருவிகள். ரூ.23 லட்சம் செலவில் காட்சிப்படுத்த விளக்க அட்டைகள், குறிப்புகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் இதர காட்சியமைப்பு பொருட்கள் உட்பட ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: