இந்தியாவில் முதன்முறையாக காட்பாடியில் எல்லை பாதுகாப்பு படையினருக்கு மினி கேன்டீன்

வேலூர்:  இந்தியாவில் முதன்முறையாக காட்பாடியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான மினி கேன்டீனை கலெக்டர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். காட்பாடி- சித்தூர் பஸ் நிறுத்தத்தில் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான கேன்டீனையும், அத்துடன் இணைந்த ஆவின் பாலகத்தையும் கலெக்டர் சண்முகசுந்தரம் ேநற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர். இந்தியாவில் மாநிலத்துக்கு ஒரு கேன்டீன் மட்டுமே எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் சென்னை ஆவடியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான கேன்டீன் இயங்கி வருகிறது. இதனால் அனைவரும் ஒரே இடத்துக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் மேலும் மினி கேன்டீன்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதில் முதல்கட்டமாக ஆந்திராவில் திருப்பதி, தமிழகத்தில் வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் கேன்டீன்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காட்பாடியில் அமைக்கப்பட்ட மினி கேன்டீன் திறக்கப்பட்டது. இந்தியாவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்காக வேலூரில்தான் முதன்முதலாக மினி கேன்டீன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது’ என்றார். இந்த கேன்டீன் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை சங்கத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்காக, முதற்கட்டமாக 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: