புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கருப்பு பணம், மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து புதிய 500 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.