பயிர் காப்பீடு திட்ட சர்ச்சை மத்திய பாஜ அரசுக்கு ப.சிதம்பரம் கண்டிப்பு

புதுடெல்லி: பாஜ. தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளையும்,  செயல்பாடுகளையும் விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய  நிதியமைச்சருமான ப. சிதம்பரம் அவ்வபோது டிவிட்டரில் அவரது கருத்துக்களை  பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பயிர் காப்பீடு திட்டத்துக்கான  பங்களிப்பை மத்திய அரசு குறைக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடும்  கண்டனம் தெரிவித்து, டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:பயிர்  காப்பீடு திட்டத்தை தேவைப்பட்டால் மட்டும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளலாம்  என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்திருப்பது, பிற்போக்குத்தனமான  நடவடிக்கையாகும்.

இதை விட வேறெதுவும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாக  இருக்க முடியாது. இது பாஜ. அரசின் குறுகிய பார்வை, தவறான  முக்கியத்துவத்துக்கு உதாரணமாக விளங்குகிறது. புதிய பயிர்  காப்பீடு திட்டமானாலும், ஏற்கனவே, பயிர் காப்பீடு செய்திருந்தாலும்,  விவசாயிகள் தாமாக முன் வந்து செய்து கொள்ள வேண்டும் என்ற அரசின் புதிய  அறிவிப்பினால், கடனில் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரிதும்  பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories: