போக்குவரத்துறையில் முறைகேடு செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்: மார்ச் 3ல் குற்றச்சாட்டு பதிவு

சென்னை: 2011 முதல் 2015 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி 2 கோடியே 80 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இந்தநிலையில், செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், ஏற்கனவே  எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைதொடர்ந்து செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில், நீதிபதி ரமேஷ் முன்பு நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி இந்த வழக்கு ஏற்கனவே எந்த நிலையில் இருந்தது, வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுவிட்டீர்களா என்று கேட்டார். அதற்கு பெற்றுவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி வழக்கு குற்றச்சாட்டு பதிவிற்காக வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் 4 பேரும் ஆஜராக வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: