விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிப்பு

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிதுந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறியது.

Advertising
Advertising

தகவலறிந்து வந்த விரைந்து வந்த சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர்  தீயை அணைக்கும் பணி மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பணியில் இருந்த  வள்ளியம்மாள், விஜயகுமார் உள்பட 3 பேர்  உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: