2009ல் ஐகோர்ட்டில் தடியடி சம்பவம் வக்கீல்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து தொடர்ந்து 12வது ஆண்டாக வக்கீல்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறும்போது, கடந்த 2009ம் ஆண்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் மீது போலீசார் சட்ட விரோதமாக தடியடி நடத்தினர். இதில் நான் உள்பட பலர் படுகாயமடைந்தோம். தடியடி சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் சிபிஐ விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19ம் ேததி தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் கருப்பு தினம் அனுசரிக்கின்றனர்.இந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். சென்னையில் உயர் நீதிமன்றம்,எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: