தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிப்பு

ஏரல்: சிவகளையில் அகழாய்வு நடத்தப்படவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் மற்றும் கல்வட்டங்களை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் புதிதாக கண்டறிந்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், அப்பகுதியில் தொல்லியல் களத்தை கண்டுபிடித்தார். இதனை இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் தமிழக மற்றும் இந்திய  தொல்லியல் துறையினர் சிவகளை பகுதியில் வந்து ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச் சியாக சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் அவர்கள் 3 அகழாய்வு குழிகளை அமைத்துள்ளனர்.

இதில் சிவகளை பரம்பு பகுதியில் 2 குழிகளும், சிவகளை வெள்ளத்திரடு பகுதியில் ஒரு குழியும்  அமைப்பதற்கான நடவடிக்கையை கடந்த வாரத்தில் அதிகாரிகள் மேற்கொண்டனர்.  அடுத்த வாரம் சிவகளையில் அகழாய்வு தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அப்பகுதியில் புடைப்பு சிற்பம் மற்றும் கல்வட்டங்களை புதிதாக கண்டறிந்துள்ளார். இந்த புடைப்பு சிற்பம் 11 செ.மீ நீளமும், 9 செ.மீ அகலமும் உள்ளது. இது வரலாற்று  ஆய்வாளர்களிடையே முக்கியமானதாக கருதப்படுகிறது.

Related Stories: