சென்னை: 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘பாராசைட்’ என்ற படம் நடிகர் விஜய் படத்தின் ‘காப்பி’ என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பட நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு திரைக்கு வந்த மின்சார கண்ணா என்ற திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். மோனிகா காஸ்டெலிேனா, ரம்பா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்தை பார்த்து ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதில் சிறந்த படம் உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதை தென் கொரிய படம் ‘பாராசைட்’ பெற்றது. இப்படத்தை போங் ஜூன் ஹே இயக்கியிருந்தார். சாங் காங்க் கோ, லீ சன் கியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை பார்த்து ‘காப்பி’ அடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.