பாரம்பரிய கட்டிடக் கலையில் உருவாகிறது அபுதாபியில் இரும்பு இல்லாமல் கட்டப்படும் முதல் இந்து கோயில் : ரம்பம் வடிவில் சுவர்கள்

துபாய்: அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயிலில், இரும்பு மற்றும் ஸ்டீல் கம்பிகளை பயன்படுத்தாமல் பாரம்பரிய கோயில் கட்டிடக் கலையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இங்கு அடித்தளம் அமைப்பதற்கான கான்கிரீட் பணிகள் நேற்று முன்தினம் நடந்தன. இந்த கான்கிரீட்டில் ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்தப்படவில்லை. நிலக்கரி சாம்பல் கலந்து கான்கிரீட் போடப்பட்டது.

Advertising
Advertising

இது குறித்து கோயில் கமிட்டி செய்தி தொடர்பாளர் அசோக் அளித்த பேட்டியில், ‘‘வழக்கமாக ஸ்டீல் கம்பி மற்றும் கான்கிரீட் கலவையுடன் அடித்தளம் அமைக்கப்படும். ஆனால், நாங்கள் இந்தியாவின் பாரம்பரிய கோயில் கட்டிடக் கலையை பின்பற்றி இந்த கோயிலை உருவாக்குகிறோம். ஸ்டீல், இரும்புக்கு பதிலாக அடித்தளத்தின் கான்கிரீட்டை வலுப்படுத்த நிலக்கரி சாம்பல் பயன்படுத்தப்படும். இதன் மூலம், கான்கிரீட் வலுவாக இருக்கும். கற்களும் ரம்பம் போன்ற வடிவில் அடுக்கி கோயில் கட்டப்பட உள்ளது,’’ என்றார்.

5,000 டன் இத்தாலி பளிங்கில் செதுக்கப்படும் சாமி சிலைகள்

‘‘அபுதாபி கோயிலில் வைக்கப்படும் சாமி சிலைகளை 5 ஆயிரம் டன் இத்தாலி பளிங்கு கல்லில் வடிவமைக்கும் பணியில், 3 ஆயிரம் கலைஞர்கள் இந்தியாவில் ஈடுபட்டுள்ளனர். கோயிலின் வெளிப்புறத்தில் 12,250 டன் இளஞ்சிவப்பு பளிங்கு கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன.’’

Related Stories: