ஜிஎஸ்டி செலுத்த தாமதம்: 46,000 கோடி அபராதம்: மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அதிரடி

‘‘அபராதம் ரொக்கமாக செலுத்துவதற்கு மட்டுமின்றி, முழு நிலுவை தொகைக்கும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்’’

Advertising
Advertising

புதுடெல்லி: ஜிஎஸ்டி தாமதமாக செலுத்தியவர்களிடம் 18 சதவீத வட்டி மற்றும் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, வட்டி 46,000 கோடி நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்க மத்திய மறைமுக வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.  தவறியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 அபராதமும், செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகைக்கு 18 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது. கடந்த 1ம் தேதிப்படி ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத, வரி செலுத்தாதவர்களிடம் வசூலிக்க வண்டிய வட்டி நிலுவை 46,000 கோடி என மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.. இந்த தொகையை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு இந்த ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு கள அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் எவ்வளவு வரி செலுத்தியுள்ளனர். எவ்வளவு பாக்கி உள்ளது என்பன உட்பட அவர்களின் ஜிஎஸ்டி எண்ணுடன் விரிவான தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. விஎஸ்டி செலுத்துபவர்கள் வரியில் ஒரு பகுதியை பணமாக செலுத்தலாம். எஞ்சியதை வரி கிரெடிட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலானோர் வரியை செலுத்தி விட்டனர். சிலர் இன்னும் செலுத்தவில்லை.

 தாமதமாக வரி செலுத்துவோரிடம் அபராத வட்டியாக 18 சதவீதம் வசூலிக்கப்படும். இது கடந்த 1ம் தேதி கணக்கின்படி ₹46,000 கோடி நிலுவையில் உளளது. இதுதவிர, தினமும் தாமத கட்டணமாக 100 வசூல் செய்யப்படும். வட்டி, ரொக்கமாக செலுத்தும் தொகைக்கு மட்டும் அல்லாமல், முழு தொகைக்கும் கணக்கிடப்படும் என்றார்.

 கடந்த 2018 டிசம்பர் 22ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 50ல் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ரொக்கமாக செலுத்தப்படும் வரிக்கு மட்டுமே அபராதம் உண்டு. இது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், மாநிலங்களில் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், ஆணையத்தின் இந்த முடிவால், பாதிக்கப்படும் வர்த்தகர்கள் பலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. இதனால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: