ரோசல்பட்டி மயானத்தில் கோழிக்கழிவுகளால் கடும் சுகாதாரக்கேடு

விருதுநகர்,: விருதுநகரை ஒட்டி உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். விரிவடைந்து வரும் ஊராட்சியின் மயானம் கேகேஎஸ்எஸ்என் நகரின் கடைசி பகுதியில் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்லும் பாதையில் கற்கள் பெயர்ந்து கிடக்கும் நிலையில், மயானத்தில் தண்ணீர், மின்விளக்கு, கழிப்பறை, தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

மயானத்தில் சடலத்தை அடக்கம் செய்ய செல்வோர் தண்ணீரை குடங்களில் எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது.அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத மயானத்தில் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள அத்துடன் 50க்கும் மேற்பட்ட கோழிக்கடை கழிவுகள் கொட்டப்படுகின்றன. மயானத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும், மாயனத்திலும் கொட்டி வருகின்றனர்.கோழிக்கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக மயானத்தில் ஈமக்கிரிகைகள் செய்ய முடியாத அவலநிலை உருவாகி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோழிக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: