விவசாயக்கடன் ரத்து கோரி காந்தி சிலையிடம் மனு

கும்பகோணம்:  தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணம் காந்திபூங்கா அருகில் பிள்ளையார் கோயில் எதிரே உள்ள காந்திசிலை முன்  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. செயலாளர் சுவாமிமலை விமலநாதன் தலைமை வகித்தார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை 100 நாட்களிலிருந்து 200 நாட்களாக  உயர்த்தி அந்த திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், 58 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு பென்ஷனாக குறைந்தபட்சம் 5ஆயிரம் வழங்கிட வேண்டும் என  வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் வேளான் கருவிகளான மண்வெட்டி, கூடை உள்ளிட்டவற்றுடன் பங்கேற்றனர். தொடர்ந்து தங்கள் கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் அளித்தனர்.

Related Stories: