தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் கணபதி இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லாவண்யா- மதன் திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய அவர்; டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன?. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்துவிட்டதா?.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது யாரை ஏமாற்ற?. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை. காவிரி பாயும் மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்த ரகசிய கடிதத்தை டெல்லிக்கு சென்று கொடுத்துள்ளார் ஜெயக்குமார். சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர்; தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. உள்ளாட்சி, எம்.பி. தேர்தல் தோல்வி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: