இலங்கை கடற்படையால் 3470 தமிழக மீனவர்கள் 10 ஆண்டுகளில் கைது: அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை:நாடாளுமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது:இந்தியாவும், இலங்கையும் செய்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், பன்னாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை மீறி, கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது, அது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.இதற்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் பதில் அளித்து பேசியதாவது:வங்கக்கடலில் பன்னாட்டு எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததற்காக 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை 3470 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் 3450 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 20 பேர் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன் இரு நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு பணிக்குழுவின் நான்காவது கூட்டத்தையும், அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது சுற்று பேச்சையும் விரைவில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: