ஓடுபாதையில் விலகி விமானம் 3 துண்டானது 3 பேர் பலி, 179 பேர் காயம்

இஸ்தான்புல்: துருக்கியில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் 3 துண்டுகளாக உடைந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். 179 பேர் காயமடைந்தனர். துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், நேற்று இஸ்தான்புல் புறப்பட்டு சென்றது. துருக்கியின் மிக குறைந்த கட்டணம் கொண்ட பெகாசஸ் விமானத்தில், 177 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 183 பேர் பயணம் செய்தனர். சபிஹாகோக்சென் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்தது.

இதனால், விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியது.  விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில்  இருந்து சறுக்கிச் சென்று 3 துண்டாக உடைந்தது. மேலும், விமானத்திற்குள் தீப்பிடித்தது.  இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர். இந்நிலையில், உடைந்த விமானத்தின் இறக்கை வழியாக பல பயணிகள் வெளியே குதித்து உயிர் தப்பினார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விமானத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 துருக்கி பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 179 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: