செம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி: செம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர், மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, தருமத்துப்பட்டி, உட்பட நூற்றுக்கு மேற்பட்ட  கிராமங்களில் குறுகியகால பயிரான மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தண்ணீர் தேவை குறைவு என்பதால் விவசாயிகள் மக்காச்சோளம்  சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செம்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.  எலி மற்றும் காட்டுப்பன்றி தொல்லை, அமெரிக்கன் படைப்புழு  தாக்குதலிலிருந்து கடுமையாக போராடி விவசாயிகள் மக்காச்சோள பயிரை காப்பாற்றினர். தற்போது அறுவடை நடந்து வருகிறது.  கடந்த வருடம் 100 கிலோ கொண்ட மக்காச்சோளம் மூடை ரூ.2500 வரை விற்பனையானது. ஆனால் தற்போது மூடை ரூ.1700க்கு விற்பனையாகிறது. இதனால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: