திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் உள்ள பழமை வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது. முன்னதாக கடந்த ஜூன் 6ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும்  சன்னதிகளுக்கு திருப்பணி நடத்தப்பட்டது. தினமும் இருவேளை ஹோமம், பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து மருந்தீஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு  பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி தரமணி சரக உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 61 கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டு இருந்தது. காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த 700 பேர் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: