தீயணைப்பு, வனத்துறையினர் இணைந்து காட்டுத் தீ தடுப்பு ஒத்திகை: ஆர்.கோம்பை மலை அடிவாரத்தில் நடந்தது

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை மலையடிவார பகுதியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீயை அணைப்பது குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆணைக்கிணங்க, திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் (முமு கூடுதல் பொறுப்பு) சந்திரக்குமார் ஆலோசனைப்படி, மலைப்பகுதிகளில் கோடை வெயில் காலத்தில் காட்டு தீ பற்றி எரியும் போது, தீ பரவாமல் தடுத்து தீயை அணைப்பது குறித்து தீ தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருதை தலைமையில், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை கரையானூர் மலையடிவார பகுதியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தீ தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது மலை அடிவாரத்தில் ஒத்திகைக்காக தீ வைக்கப்பட்டு அதனை எந்த திசையிலிருந்து அணைப்பது, தீயில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, காட்டுத் தீ மேலும் பரவாமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

Related Stories: