தஞ்சை பெரியகோயிலில் பாதுகாப்பு ஒத்திகையின்போது கண்காணிப்பு ஹெலிகேம் விழுந்து நொறுங்கியது: பக்தர்கள் அலறிஅடித்து ஓட்டம்

தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் பாதுகாப்பு ஒத்திகையின்போது கண்காணிப்பு ஹெலிகேம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை பெரியகோயில், யாகசாலை மட்டுமின்றி தஞ்சை நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே நகரில் இருந்த கண்காணிப்பு கேமராக்களுடன் புதிதாக 192 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் மொத்தம் 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  3 ஹெலிகேம் கேமிரா மூலமும் பக்தர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.

 பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஜிபி ஜெய்ந்த்முரளி, டி.ஐ.ஜி லோகநாதன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பக்தர்கள் செல்லும் வழிகள். பொருட்கள் எடுத்து செல்லும் பாதை, தற்காலிக பேருந்து நிலையம், தற்காலிக காவல் நிலையங்கள், சோதனை சாவடிகளை ஏடிஜிபி ஜெய்ந்த்முரளி ஆய்வு செய்தார். பின்னர் கோயிலுக்கு வந்த ஏடிஜிபி,  ஹெலிகேம் காமிரா ஒத்திகையை துவக்கி வைத்தார். பாதுகாப்பு குறைபாடுகள், யாகசாலை பாதுகாப்பு, எந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கும், எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பது பற்றிகட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில் ஹெலிகேம் கேமரா பதிவுகளை சோதனையிட்டார். அப்போது திடீரென கேமரா சிக்னல் கிடைக்கவில்லை. கோயில் வெளியே வந்து பார்த்தபோது கோயில் நடராஜர் மண்டபம் முன் உள்ள தகர கொட்டகையில் ஹெலிகேம் இடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இதனால்  அதிகாரிகளும், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகேம் விழுவதை பார்த்து பக்தர்கள் அலறி ஓடினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: