அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய விவகாரம் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் இறுதிவாதம் தொடங்கியது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான இறுதி வாதத்துக்கான விசாரணை நேற்று தொடங்கியது.இந்தாண்டு நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நாடாளுமன்றத்தை செயல்படுத்த விடாமல் தடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதிநிதிகள் சபையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 29ம் தேதி செனட் சபையில் தொடங்கியது.

 இந்நிலையில், டிரம்ப்பின் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான இறுதி வாதத்துக்கான விசாரணை நேற்று தொடங்கியது. வாஷிங்டனில், இறுதி வாதத்துக்கான விசாரணை தொடங்கிய நிலையில், அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அரசியல் கூட்டம் அயோவா மாகாணத்தில் நடைபெற இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: