ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கொரோனா முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டு

நாகர்கோவில்: சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பல மாணவ, மாணவியர் சீனாவில் இருந்து திரும்பியுள்ளனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் இதுவரை கெரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் சீனாவில் இருந்து திரும்பியவர்கள் ஒரு மாதம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தி உ்ள்ளது.

இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 4 படுக்கை வசதிகளுடன் அதிநவீன உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் தற்போது ெகாரோனா முன் கவனிப்பு சிறப்பு சிகிச்ைச வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 8 படுக்கை வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி அல்லது தொடர் இருமல், தும்மல் உள்ளவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்த முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு கவனிக்கப்படுவர். கொரோனா பரிசோதனைக்கு முன்பு இவர்கள் இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பர் என டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவில் இருந்த வந்த 2 மாணவர்கள் இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஙகளை பரிசோதனை செய்து கொண்டனர். அவர்கள் தங்கள் வீடுகளில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் இருக்க வசதி இல்லாத பட்சத்தில் இந்த முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முன் கவனிப்பு சிறப்பு சிகிச்சை வார்டை டீன் சுகந்தி ராஜகுமாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: