பிரதமர் உறுதி பொருளாதாரம் குறித்து விவாதிக்க முக்கியத்துவம்

புதுடெல்லி: ‘‘பட்ஜெட் கூட்டத் தொடரில், பொருளாதார விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதம் நடத்தப்படும்,’’ என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளாக நேற்று அவைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: வரும் பத்தாண்டுக்கான வலிமையான கட்டமைப்பை நடப்பு கூட்டத் தொடரில் எம்பிக்கள் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும். இந்த கூட்டத் தொடரில் பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக இரு அவைகளிலும்  ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி, உலகளாவிய பொருளாதார சூழலில் இருந்து நாம் எவ்வாறு அதிகப்படியான நன்மைகளை பெறுவது என்பதே எங்கள் நோக்கம். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அதிகாரம் வழங்கிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இப்பணியை இந்த பத்தாண்டிலும் தொடர்வோம். நடப்பு தொடரில் தினந்தோறும் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: