விவசாயியிடம் நெல் அறுவடை இயந்திரம் பறிமுதல் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் மீது கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு

சேலம்:சேலம்  மாவட்டம், ஆத்தூர் அருகே இடையப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (32) விவசாயியான இவர், கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டியில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் மூலம் நெல்அறுவடை இயந்திரம் வாங்கினார். இந்நிலையில் விவசாயி வெங்கடேஷ், மாத தவணையை முறையாக செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வெங்கடேஷிடம் இருந்து நெல்அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

இதனையடுத்து, வெங்கடேஷ் கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் கட்ட வேண்டிய தொகை 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில் அவர்கள் 15.50 லட்சம் கட்ட சொல்கிறார்கள். என்னிடம் கந்து வட்டி வசூல் செய்கின்றனர் என்று புகார் தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து கருப்பூர் போலீசார் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் கருப்பண்ணன், கணேசன் ஆகியோர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: