மூணாறு அருகே இடமலைக்குடியில் கட்டிடத்தை இடித்துத் தள்ளி காட்டுயானைகள் அட்டகாசம்

மூணாறு:மூணாறில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த காட்டுயானைகள் கட்டிடங்களை இடித்து, கணினி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை நாசம் செய்்தன.கேரள மாநிலம், மூணாறில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி இடமலைகுடி. இங்கு கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் தொந்தரவு அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இந்நிலையில்  நேற்று முன்தினம் சொசெட்டி குடியில் காட்டுயானைகள் புகுந்தன. அங்கு செயல்பட்டு வந்த அக்சயா நிலையத்தின் (மக்கள் சேவை மையம்) கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தின. மேலும்  அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை நொறுக்கின. அதிர்ச்சியடைந்த பழங்குடி மக்கள், பட்டாசுளை கொளுத்தியும், தீயிட்டும் யானைகளை துரத்தினர்.

மக்கள் கூறுகையில், ‘‘இடமலைகுடியில் காட்டுயானைகளின் தொந்தரவு தொடர்கதையாக மாறியுள்ளது. இப்பகுதி ஆதிவாசி இளைஞர்கள் இரவு நேரங்களில் தீ மூட்டியும், பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்தி வருகின்றனர். அக்சயா நிலையத்தை இடித்ததன் மூலம் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யணைகளிடம் இருந்து எங்களை பாதுகாக்க சோலார் விளக்குகள் மற்றும் மின் வேலிகள் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: