தர்மபுரியில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம், திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனி மூடியிருந்ததால் அவ்வழியே வந்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, சளி போன்ற  பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. ஸ்வெட்டர், ஜெர்கின், குல்லா போன்ற குளிர்கால ஆடைகளை பயன்படுத்தி மக்கள் குளிரில் இருந்து தங்களை காத்து கொள்கின்றனர்.

Related Stories: