71-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர்; சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பங்கேற்பு

புதுடெல்லி: 71-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். இதனையடுத்து முப்படை வீரர்கள் குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பங்கேற்கேற்றுள்ளார். விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 71வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதே நேரம், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற மத்திய அரசின் அடுக்கடுக்கான அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் போராட்டக்களமாக மாறி உள்ளது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் காஷ்மீரில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இவை எல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால், இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். மேலும், பல இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சமும் நிலவி வருகிறது இச்சதிகளை முறியடிக்க, மத்திய அரசும் மாநில அரசுகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள்,பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாநில தலைநகரங்களில் நடக்கும் குடியரசு தின விழாவில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.

Related Stories: