எஸ்.ஐ. வில்சனை சுட்டு கொன்றது எப்படி?: களியக்காவிளை சோதனை சாவடிக்கு இன்று தீவிரவாதிகளை அழைத்து செல்ல போலீசார் திட்டம்

குமரி: கன்னியாகுமரியில் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளிடம் ஏற்கனவே தீவிர விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில் கொலை நடந்த சோதனை சாவடிக்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி களியக்காளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை கடந்த 8ம் தேதி சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக  அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகிய 2 தீவிரவாதிகள் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக போலீசார் நீதிமன்றத்தை நாடினார்கள். அதேபோல 28 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவின் அடிப்படையில் தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து,  தீவிரவாதிகள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இன்று 6வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது அவர்களை எர்ணாகுளம் கொண்டு சென்று அங்கு வில்சனை சுட்டு கொள்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றினார்கள். அதனை தொடர்ந்து, நேற்று திருவனந்தபுரத்திற்கு அழைத்து சென்று வில்சனை கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கைப்பற்றினார்கள். தற்போது விசாரணையானது முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று கொலை நடைபெற்ற இடத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று போலீசார் நாகர்கோவிலில் இருந்து கொலை நடைபெற்ற களியக்காவிளை பகுதிக்கு கொண்டு செல்லவுள்ளனர். அங்கு வில்சன் கொலை எவ்வகையில் நடைபெற்றது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்யவுள்ளனர்.

Related Stories: