மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க அவசியம் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன் அடுத்த தடாலடி

வத்தலக்குண்டு: மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். அவர்களை நாங்கள் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்று உறவு கூறி அழைத்து வாழ்ந்து வருகிறோம். அதிமுக எந்த சாதிக்கும் எதிரான கட்சியல்ல. இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசால் ஒரு பிரச்னை வந்தால், ஒரு துன்பம் வந்தால் அதை எதிர்க்கின்ற முதல் ஆளாக, முதல் கட்சியாக அதிமுக இருக்கும். மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ என்றார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலக தயார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: