காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக கூறிய டிரம்ப் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உலக நாடுகளின் ஆதரவை நாடியது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிலும் காஷ்மீர் பிரச்சனையை சீனாவின் உதவியுடன் பலமுறை பாகிஸ்தான் எழுப்ப முயன்றது, ஆனால்  எந்த நாட்டின் ஆதரவும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை. காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நாடுகள் கூறியதால் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தது.

காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்த போதும் மீண்டும் டிரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இதனை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது. டிரம்ப்பின் சமரச முயற்சி முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்னை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: