தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் விவகாரம்: அறநிலையத்துறை, தஞ்சை ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயலர், தஞ்சை ஆட்சியர், மத்திய தொல்லியல்துறை ஆணையர், கோயில் நிர்வாகி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரும் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நிதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

 தஞ்சை பெரியகோவில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தின் பெருமை மற்றும் கட்டிடக்கலையை நுட்பம் ஆகியவற்றின் பெருமையை தாங்கியுள்ள இந்த கோவிலின் குட முழுக்கு வருகிற 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிப்ரவரி 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் செய்யும்போது குறித்த விவரங்கள் அடங்கிய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், குடமுழுக்கு நிகழ்வு மட்டும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மத்திய தொல்லியல் துறை ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் தேவஸ்தான நிர்வாகி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27-ந் தேதி ஒத்திவைத்தனர்.

Related Stories: