2வது நாளாக விலை சரிவு தங்கம் சவரன் ரூ.30,520க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.30520க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைவதும், அதன் பிறகு அதே விலையில் அதிகரிப்பதுமான போக்கும் காணப்பட்டது. கடந்த 18ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,828க்கும், சவரன் ரூ.30,624க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் (20ம் தேதி) ஒரு கிராம் ரூ.3,824க்கும், சவரன் ரூ.30,592க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.3,815க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.30,520க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், தற்போது பெயரளவுக்கு குறைந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று நகை வாங்குவோர் கூறியுள்ளனர். இன்னும் விலை குறைந்தால்தான் நகை வாங்க ஆர்வம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Related Stories: