அதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: அ.தி.மு.க.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. அதன்படி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாலை ஆத்தூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் அமைச்சர்கள் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். அ.திமு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

தற்போதைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார். ஒரு சாதாரண மனிதர் கூட உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் என்று கூறினார். கடந்த காலங்களில் மிட்டா மிராசுதாரர், தொழிலதிபர் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றியவரும் எம்.ஜி.ஆர் தான் என தெரிவித்தார். வாழ்ந்தவர் கோடி, வளர்ந்தவர் கோடி என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்றும் அறிஞர் அண்ணாவிற்கு புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர்-க்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் படங்களில் இல்லை. ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று கூட அவை மனதில் நிற்பதில்லை . திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வர்மான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர் என்றார். தமிழகத்தில் அதிக காலங்கள் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்றும் முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories: