கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவி வழங்கப்படுவதால், கந்து வட்டி பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: தமிழகத்தில் கந்து வட்டி பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில்  சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் இருந்து கே.கே நகர் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன்  தேவ ஆசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செல்லுார் ராஜூ, சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்,  மேலும் இளைஞர்கள் தான் நாட்டின் செல்வங்கள் என்றும், அவர்கள் சாலை விபத்தில் இறப்பதை தடுக்க வேண்டும் எனவும் கூறினார். 2011-ம்  ஆண்டில் இருந்து தமிழகத்தில் கந்து வட்டி பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது என்றும், கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள் வழங்கப்படுவதே  இதற்கு காரணம் என்றும் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related Stories: