நெல்லை, தென்காசியை சேர்ந்த 5 பேர் உபா சட்டத்தில் கைது

தென்காசி: நெல்லை, தென்காசியில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகம் முழுவதும்  விசாரணை நடத்தி வந்தனர். இவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை மூலம் ஏற்கனவே சில வழக்குகளில் தொடர்புடைய மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.ஒரு சில நாட்கள் விசாரணை நடந்த நிலையில், தற்போது தென்காசி மதீனா நகரை சேர்ந்த முகம்மது ஷக்காரியா (37), தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்காதர் (31), இதே பகுதியை சேர்ந்த மேசாக் என்ற முகம்மது இஸ்மாயில் (39), திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த அல்ஹபீப் (31), மேலப்பாளையம் ஹாமிம்புரத்தை சேர்ந்த செய்யது ஹாஜா ஹரீம் நவாஸ் (38) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: