5, 8ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு எழுதுவதா?: ஆசிரியர் நல கூட்டமைப்பு கண்டனம்

சென்னை: ‘ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் வேறு பள்ளியில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் தான் எழுத வேண்டும் என்ற முடிவை  கல்வித்துறை கைவிட வேண்டும்’’ என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சங்க நிறுவன தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் முதல்முறையாக இந்த கல்வி ஆண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், படிக்கும் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாது.

இது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். இதை ரத்து செய்ய வேண்டும். மேலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவரே பொதுத் தேர்வை அந்தந்த பள்ளி மையத்தில் எழுதுகின்றனர்.ஆனால் ஐந்து, எட்டாம் வகுப்புக்கு தொலைவில் உள்ள வேறு பள்ளிகளில் மையங்கள் அமைப்பது என்ற முடிவு கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும். பயிலும் பள்ளிகளிலேயே மாணவர்களை தேர்வு எழுத  அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: