சதுரகிரி கோயிலுக்கு செல்ல வசதியாக வண்டிப்பண்ணையில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்கு செல்ல வசதியாக தாணிப்பாறை அருகே வண்டிப்பண்ணையில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி கடல் மட்டத்தை விட 4500 அடி உயரத்தில் சுந்தரமகாலாிங்கம் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

ஆடி அமாவாசை திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். திருவிழாவின் போது வண்டிப்பண்ணையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும். இங்கு போதுமான அடிப்படை வசதி செய்து தராததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாவர்.  இக்கோயிலுக்கு தொலைதூர ஊர்களில் இருந்து ஏராளமான பக்தா–்கள் வந்து செல்கின்றனா். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். வண்டிப்பண்ணையில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் கட்டினால் குளியல் அறை, கழிப்பறைகள், தங்கும் அறை போன்ற வசதி செய்ய வாய்ப்புள்ளது.

வண்டிப்பண்ணையில் அரசு புறம்போக்கு நிலம் ஏராளமாக இருப்பதால் இதனை கையகப்படுத்தி நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: