திருத்தணியில் கராத்தே போட்டி

திருத்தணி: ஸ்டார்டன் மார்ஷியல் கலை அகடமி சார்பில், திருத்தணியில் நடைபெற்ற 3 மாநிலங்களுக்கு இடையிலான கராத்தே போட்டியில், ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 2020ம் ஆண்டிற்கான கராத்தே போட்டி நடைபெற்றது.   இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய  மாநிலங்கள் பங்கேற்றன. இந்த மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். திமுக நகர செயலாளர் பூபதி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். வீரர், வீராங்கனைகளுக்கு வயது, கட்டா என வகைகளுக்கு ஏற்ப பல்வேறு பிரிவு களாக போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை அகடமியின் நிர்வாகிகள் ரவி, கார்த்திக், ஜெகதீசன், வேலுபாண்டியன், சந்தீப் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: