முத்தரசன் பேச்சு மீண்டும் ஒரு விடுதலை போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது

நாகர்கோவில்: நாட்டில் மீண்டும் ஒரு விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: நாட்டில் இரண்டாவதாக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மோசமான கொள்கைகள்தான் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் எல்லாம் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பலத்தைக்கொண்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திடவும் மக்களை மத ரீதியாக, மொழி ரீதியாக, இன ரீதியாக பிரித்தாளும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்த பா.ஜ நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அது குடும்ப பிரச்னைதான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: