36 மத்திய அமைச்சர்கள் ஒரு வாரம் காஷ்மீர் சுற்றுப்பயணம் : மத்திய அமைச்சகம் தகவல்

டெல்லி : காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து இருயூனியன் பிரதேசங்களும் துணை நிலை கவர்னர்கள் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில் 36 மத்திய அமைச்சர்கள் , வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 36 மத்திய அமைச்சர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களிலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் ஜனவரி 19-ம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் பந்தல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன்ரெட்டி, ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்ரமண்யம் மற்றும் லடாக் செயலர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: