திமுகவுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை,: திமுகவுக்கு, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாக செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் மேற்ெகாண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்.திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக தேர்தல் களங்களில் பல வெற்றிகளை குவித்துள்ளது.

அந்த வெற்றிகள் தொடர்ந்திட ஒற்றுமையுடனும், புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம். ஜனநாயகத்தை வீழ்த்த சதி செயல்களில் ஈடுபட்டு வரும் மக்கள் விரோத ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, எதிர்த்து, முறியடித்து மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் பெருமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.

Related Stories: