சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து, தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், அதிமுகவைச் சேர்ந்த காக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் காக்குடி ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் வடிவேல், பாஜ கிளைச் செயலாளர் ரவி ஆகியோர் நேற்று அறிவாலயம் வந்தனர்.