இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு; சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859-ல் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்து 12,329 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. ஈரான் தாக்குதலை தொடர்ந்து உருவான ஸ்திரமற்ற நிலையால் பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத சரிவை சந்தித்தது. இதனால் பங்குச்சந்தையில் 6ம் தேதி ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர். இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி தர விரும்பவில்லை என டிரம்ப் அறிவித்ததால், பங்குச்சந்தைகள் சற்று உற்சாகம் உடைந்தன.

இந்நிலையில் வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 41,600 புள்ளிகளானது. அதேபோல், வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டுஎண் நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 12,257 புள்ளிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.

இதே போல் இன்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்து 12,329 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு ரூ.2,25,554.62 கோடி அதிகரித்து, ரூ.1,57,06,155.38 கோடியாக இருந்தது. வங்கி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் ஏற்றம் அடைந்தன.

Related Stories: