பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்: வெப்பக்காற்று பலூன்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு

கோயம்புத்தூர்:  பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 6வது ஆண்டாக பலூன் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஜப்பான், நெதர்லாந்து  உள்ளிட்ட  நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன. சர்வதேச பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக பலூன் விழா சிறப்பாக நடைபெற்றது.

தற்பொழுது இந்த ஆண்டும் பலூன் விழா மிக உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிறப்பாக பலூனில் சுற்றுலா பயணிகள் ஏறி பயணம் செய்தனர். இந்த விழாவிற்காக ஜப்பான், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து 4 ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் விழாவை கண்டு ரசிக்க தமிழகத்திலிருந்தும் பொதுமக்கள் வந்துருகின்றனர்.  காற்று குறைவாக வீசும் காலை நேரத்தில் வானில் பறக்கவிடப்படும் பலூன்கள், மாலையில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.  மேலும் பொங்கல் பண்டிகை நடைபெற இருப்பதால் பாரம்பரிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: