மோடியின் பட்ஜெட் ஆலோசனை: முதலாளி, நண்பர்களுக்கு மட்டுமே:ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: ‘தனது முதலாளித்துவ மற்றும் பணக்கார நண்பர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி விரிவான பட்ஜெட் ஆலோசனையை நடத்துகிறார்,’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அடுத்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் கேட்டார். 2024ம் ஆண்டு 5 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்ெஜட் ஆலோசனைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.  

இது குறித்து நேற்று அவர் ‘சூட் பூட் சர்க்கார் என்ற ஹேஸ்டேக்குடன் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில், ‘பிரதமர் மோடியின் மிகவும் விரிவான இந்த பட்ஜெட் ஆலோசனையானது, தனது முதலாளித்துவ நண்பர்கள் மற்றும் பணக்கார நணபர்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு மற்றும் சிறு தொழில் செய்வோர், நடுத்தர வரி செலுத்துவோர் இவர்களின் நலனில் எல்லாம் அக்கறை என்பதே கிடையாது,’ என கூறியுள்ளார்.

Related Stories: